சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ், போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உடன் ஆலோசனை கூட்டமானது நடைப் பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் தொடர்ந்து பேசினார். அதில் அவர் கூறியதாவது “தமிழ்நாட்டில் போதைக்கு அடிமை ஆனவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என நினைக்கும் போது மிகவும் கவலை அளிக்கிறது.

போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை அதில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும். இந்த அரங்கில் இருக்கும் நாம் அனைவரும் அழிவு பாதையை உருவாக்கும் போதைப்பொருட்களை நமது ஆற்றல் கொண்டு தடுக்க வேண்டும். புதிதாக எந்த ஒரு இளைஞரும் இதனால் பாதிக்ககூடாது. இந்த உறுதியை காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் அனைவரும் கையில் எடுத்து கொள்ள வேண்டும்.

போதைப் பொருள் பயன்பாட்டில் குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் குறைவுதான் என்று சமாதானம் அடைய கூடாது. போதை பொருள் பயன்பாடுதான் கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுக்கிறது. இந்த குற்றத்தில் சிக்கியவர்களில் பலர் போதை பழக்கத்திற்கு அடிமை ஆனவர்களாகவே இருக்கின்றனர்.

ஒரு சிறு துளி போதை பொருள் இருந்தாலும் அது அவமானதும் தான், எனவே அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். சிலர் என்னதான் கண்டிப்பாக இருந்தாலும் திருட்டுத்தனமாக போதைப் பொருட்களை விற்று வருகின்றனர். அது போல யாரதும் சிக்கினால் அவர்கள் மீது கடுமையான தண்டனை எடுக்கப்படும்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.