‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலரை வெளியிடும் முதலவர்!

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனராக கருதப்படுபவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் நெடுநாள் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம்-1 படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக நிறைவு அடைந்தது. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

ponniyin-selvan
Ponniyin Selvan

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம் , சரத்குமார், பிரபு, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளனர். மணிரத்னத்தின் படமான இப்படத்திற்கு வழக்கம் போல ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்து உள்ளார்.

ponniyin-selvan
Ponniyin Selvan

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் டீஸர் ஜூலை-9 அன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமானது பாகுபலியின் சாதனையை மிஞ்சும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டும் என சினிமா வல்லுநர்கள் பலரால் கூறப்படுகிறது.

ps1-audio-launch

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா கடந்த மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.

rajinikanth-kamalhaasan
Rajinikanth – Kamalhaasan

இதைத் தொடர்ந்து நேற்று வெளியான தகவலின் படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

mk-stalin
Chief Minister M.K. Stalin

மேலும் இப்படத்தின் ட்ரைலரை மு.க.ஸ்டாலின் அவர்களே வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Spread the Info

Leave a Comment