தமிழக அரசு சார்பாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவானது இன்று மாலை சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இந்த விழாவில் அமைச்சர்கள் ம.சுப்ரமணியன், சாமி நாதன், சேகர் பட்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் 2009-2014 வரையிலான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், பாடலாசிரியர் என பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், ஆர்யா, நாசர், சித்தார்த், சமுத்திரகனி, தம்பி ராமையா ஆகியோர் விருதுகள் பெற்றனர்.

மேலும் இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் சின்னத்திரையில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு விருதுகள் தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டது.