36 மணி நேரத்தில் 15 கொலைகளா? – காவல்துறை விளக்கம்!

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்து உள்ளதாக சில ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி 7 கொலைகளும் 23ஆம் தேதி 5 கொலைகளும் நடந்து உள்ளது.

sylendra-babu

மேலும் ஆகஸ்ட் மற்றும் அதற்கு முந்தைய மாதம் நடந்த கொலைகள் குடும்ப உறுப்பினர் தகராறு, தனி நபர் விரோதம் ஆகியவற்றால் நடந்து உள்ளது என காவல் துறை விளக்கம் தந்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டை விட 101 கொலைகள் குறைந்து உள்ளதாக விளக்கம் அளித்து உள்ளது.

Twitter Embed Code Credits: Tamil Nadu Police

Spread the Info

Leave a Comment