திமுகவின் தலைவராக 5வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று தனது 4 ஆண்டுகள் முடிந்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். முன்னாள் தமிழக முதலவர் ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது எதிர்க்கட்சி மற்றும் திமுகவின் தலைவராக மு.கருணாநிதி இருந்தார்.வயது முதிர்வு காரணமாக மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

mk-stalin

மொத்தமாக 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார் மு.க.ஸ்டாலின். இதையொட்டி மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சமாதிக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்.

mk-stalin

தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டிவீட்டை ஸ்டாலின் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே!எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்” என இவ்வாறு நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

Spread the Info

Leave a Comment