சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ரூ.315 கோடியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பழைய சட்டக்கல்லூரியை புதுப்பிப்பதற்கான விழாவில் இன்று முதல்வர் மு.கஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய முதல்வர் வரும் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மிகச் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றி உள்ளார், அவ்ருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்ச்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக நடந்து உள்ளது. சென்னை உயர்நீதி மன்றம் பயன்பாட்டுக்காக புது கட்டிடங்கள் புதுப்பித்தல் மற்றும் சட்டக்கல்லூரியை புதுப்பித்தல் மற்றும் அடிகள் நாடும் விழாவில் கலந்து கொள்வதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சில கோரிக்கைகள் வைத்தார். அதில் உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைய வேண்டும் மேலும் தமிழ் மொழி வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் என கூறினார்.