நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் உருவான ‘கேப்டன்’ திரைப்படம் நேற்று உலகெங்கும் வெளியானது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிய இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் கதையானது ஒரு குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவ வீரர்கள் ஒவொருவராக கொல்லப்படுகிறார்கள்.

அவர்கள் எப்படி இறக்கிறார்கள்? யாரால் இறக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க ராணுவத்தில் இருக்கும் ஆர்யாவின் குழு வருகிறது. அவர்கள் சென்று என்ன நடக்கிறது? என்பது கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக்கதை. இப்படமானது மக்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்று உள்ளது.

மேலும் இப்படத்தை பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து உள்ளார். இப்படத்தை குறித்து அவர் கூறுகையில் “காட்டுல இருக்குற ஏலியன தேடி போறாங்க, அது அவங்க மூஞ்சில காரி துப்புது. படம் முழுக்க ஒரே குறியீடே போச்சு.

அந்த ஏலியன் காரி துப்புனத்துக்கு அப்புறம் சரக்கு அடிச்சுட்டு போற மாதிரி கெளம்பி போறாங்க. அந்த ஏலியன ஐட்டம் டான்ஸ் பாக்குற மாதிரி பாத்துட்டு போறாங்க” என கழுவி ஊத்தியுள்ளார்.