நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து அவரே இயக்கிய படம்தான் ‘இரவின் நிழல்’. ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் வெளியான இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பிராகிடா, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். வித்யாசமான மற்றும் புதுமையான கதைகளை எழுதி அதை இயக்குவதில் கைதேர்ந்தவர் பார்த்திபன். புதுமையை கையாளும் இவர் இந்த படத்திலும் வித்யாசத்தை காட்டி உள்ளார். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த படமானது ஒரே ஷார்ட்டில் எடுக்கப்பட்ட படமாகும். அதாவது ‘non-linear-single -short-film’ என கூறப்படும் தொழில்நுட்பத்தை கையாண்டு உள்ளார்.

திரில்லர் பிலிம்மாக உருவான இப்படத்தை தமிழ் சினிமாவின் மைல்கல் என பலர் பாராட்டினாலும் ஒரு சிலருக்கு இந்த படம் பிடிக்கவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ள இப்படமானது ஒளிப்பதிவில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் ஏன் ஒரு தரப்புகூறுகின்றனர். இதற்கு முன்னர் இவர் எடுத்த ‘ஒத்த செருப்பு’ படம் அனைவராலும் பேசப்பட்டது. யூடியுபில் விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறனுக்கும் பார்த்திபனுக்கும் சில நாட்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் பலர் பாராட்டியே வருகின்றனர். கடந்த வாரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்திபனை நேரே அழைத்து பாராட்டினர். அதை போலவே முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்த்திபனை நேராக கூப்பிட்டு பாராட்டி உள்ளார். இப்பதிவில் அவர் கூறியதாவது ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு ஒத்த ஷார்ட் திரைப்படம். ‘இரவின் நிழல்’ படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம். Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.