சென்னையின் மாமல்லபுரத்தில் நடைப்பெற்ற வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா தற்போது நடைபெற்று வருகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நிறைவு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் தொடக்க விழாவானது கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கியது. மேலும் தமிழ்நாட்டின் பல பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மிக உற்சாகமாக நடைபெற்றது.

இந்தியாவில் முதல் முறை நடைபெற்ற இந்த தொடரில் கிட்டத்தட்ட 187 நாடுகளைச் சேர்ந்த 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இன்று இறுதி கட்டத்தை எட்டிய இப்போட்டியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மெய்ய நாதன். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்தியா முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்க் தோனி கலந்து கொள்ள இருந்த நிலையில் சில காரணங்களால் அவர் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஜிம்னாஸ்டிக், கபடி, பரதநாட்டியம் மற்றும் அந்தரத்தில் பறந்துகொண்டேயா பியானோ வாசித்த கலைஞர் என பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கோர்ட் ஷூட்டுடன் கலந்து கொண்டார்.

இப்போட்டியின் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் ஸ்டாலின் அவர்கள் டிரம்ஸ் மணியுடன் சேர்ந்து டிரம்ஸ் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கமா பதக்கங்களை வழங்க உள்ளார்.