சில மாதங்களுக்கு முன்னர் மகளீர் சாதாரண அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கட்டணம் தேவை இல்லை இலவசம் என தமிழக அரசுஅறிவித்து. இதனை பெண்கள் மற்றும் மகளிர் நல சங்கங்கள் வரவேற்றனர். ஆனால் எந்த பேருந்துகளுக்கு இலவசம் என்று பல பெண்கள் அறியவில்லை. அதாவது சாதாரண பேருந்துகளுக்கு தான் இலவசம் என அறிவிக்கப்பட்டது. தாழ்தள சொகுசு பேருந்துகள், டீலக்ஸ் பேருந்துகள் ஆகியபெருந்துகள் இதில் அடங்காது. இதனை பெண்கள் பெரும்பலும் அறியவில்லை.

அனைத்து பேரூந்துகளிலும் ஏறி வாக்குவாதம் ஆனது. அதனால் இலவச பேருந்துகளை மட்டும் தனித்துவமாக காண்பிப்பதற்கு பிங்க் நிற பெயிண்டுகள் அடிக்கப்படும் என அரசால் கூறப்பட்டது. பிறகு சில தினங்களுக்கு பிறகு பேருந்தின் முன் புறம் மட்டும் பின் புறம் மட்டும் பிங்க் நிறம் அடிக்கப்பட்டது. பக்கவாட்டுகளில் செலவை குறைக்கும் வகையில் பெயிண்ட் முடிக்கப்படவில்லை. இதனை சமூக வலைத்தளங்களில் கடுமையாக, நகைச்சுவையாக விமர்சிக்கப்பட்டது.

மேலும் பேருந்துகளின் தோற்றத்தை பார்க்க வித்யாசமாக இருந்ததால் நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேடர்ஸ் வச்சு செய்தனர். கடும் விமர்சனத்தை அடுத்து பேருந்தின் வெளிப்புறம் முழுவது இப்போது பிங்க் நிற பெயின்ட் முடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக பேருந்து முழுதும் பிங்க் நிற பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.
