டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

ரத்தன் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரி இன்று கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு இவர் தலைவராக தேந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2016ஆம் ஆண்டு முறைகேடு புகார் காரணமாக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ratan-tata-cyrus-mistry
Ratan Tata – Cyrus Mistry

இன்று தனது காரில் அஹமதாபாத்தில் கிளம்பி மும்பைக்கு பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதியதாக கூறப்படுகிறது.

கார் பெரும் சேதம் அடைந்த நிலையில் உள்ளே பயணம் செய்து கொண்டு இருந்த 4 பேர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

cyrus-mistry
Cyrus Mistry

ஓட்டுநர் மற்றும் ஒருவர் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Spread the Info

Leave a Comment