தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் மூன்று நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க திருச்சியில் உள்ள ரைபிள் கிளப்புக்கு வந்து இருந்தார். திரைப்படங்களில் ஒரு பக்கம் நடித்து கொண்டிருந்தாலும் பைக்கிங் மற்றும் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித் குமார். பொது மேடை நிகழ்ச்சிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாதவர் அஜித்குமார். திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் குமார் கலந்து கொள்வதற்காக வந்து இருந்தார். மொத்தமாக மூன்று பிரிவுகளில் அதாவது 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் கீழ் இப்போட்டி நடைப்பெற்றது.

இவர் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள் பல மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு படையெடுத்து வந்தனர். திடீரென்று இக்கூட்டம் கூடியதால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பின்பு போட்டி முடிந்ததும் கிளப்பில் உள்ள மொட்டை மாடியில் ஏறி நின்று தன் ரசிகர்களிடம் கையசைத்தார், உடனே அவரது ரசிகர்கள் உற்சாகமாகி மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்வானது சமூக வலை தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் இப்போட்டியில் நடிகர் அஜித்து குமார் அணி பதங்கங்களை குவித்து உள்ளது. அஜித் குமார் அணி சார்பாக ஆறு குழுக்கள் கலந்து கொண்டனர்

சென்டர் ஃபயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணியினர் தங்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணியினர் தங்கம் , 50 மீட்டர் ஃபிரி பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணியினர் தங்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணியினர் தங்கம், 50 மீட்டர் ஃபிரி பிஸ்டல் ஆண்கள் அணியினர் வெண்கலம் , ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணியினர் வெண்கலம் என 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 6 பதக்கங்களை வென்றுள்ளது. இச்செய்தியை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கில் பரப்பி கொண்டாடி வருகின்றனர்.
