தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநரும் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநரானா தமிழிசை சௌந்தர்ராஜன் பயனாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டையை வழங்கினார்.
மேலும் ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்தவர்களுக்கு தெலுங்கின் சூப்பர்ஸ்டாரான சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டையை வழங்கினார்.

ரத்த தானம் மற்றும் கண் தானம் செய்யும் வகையில் உதவியுள்ள நடிகர் சிரஞ்சீவிக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் தனது பாராட்டை தெரிவித்து உள்ளார்.
நடிகர் சிரஞ்சிவி ஏழை எளியோருக்கு உதவுவதை போல மற்ற சினிமா கலைஞர்களும் முன்வந்து உதவ வேண்டும் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.