விஜய்க்கு சமந்தா வில்லியா?😱 அடுத்த அப்டேட்!

விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிடத்தட்ட உறுதியாகி உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா வில்லியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் தனது 66ஆம் படமான ‘வாரிசு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வம்சி இயக்கம் இப்படத்தை தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். ரஷ்மிக்கா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு, சரத் குமார், பிரபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் வாரிசு படம் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

varisu-1stlook
varisu

இதைத் தொடர்ந்து தனது 67ஆம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதால் இப்படமும் சினிமா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் சமந்தா நெகடிவ் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விஜய் கமிட் ஆனதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்து உள்ளது. ஏற்கனவே சமந்தா விஜயுடன் கத்தி, மெர்சல் மற்றும் தெறி படத்தில் நடித்து நல்ல வெற்றிபெற்றது. அதைத் தொடந்து இப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருந்தால் இந்த படமும் வெற்றி பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவல்கள் கூடிய விரைவில் படக்குழு அதிகாரப் பூர்வமாக வெளியிட உள்ளது.

samantha
Spread the Info

Leave a Comment