விஜய் தேவரகொண்டாவை பீட் செய்த அண்ணாச்சி!😉 – எப்படி தெரியுமா?

நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து கடந்த 25ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘லைகர்’. பூரி ஜெகநாத் எழுதி இயக்கி இருந்த இப்படத்திற்கு சுனில் காஷ்யப் இசையமைத்து இருந்தார்.

liger
Liger

மேலும் இப்படத்தில் பிரபல குத்து சண்டை வீரரான மைக் டைசன் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது பாக்ஸிங் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படமானது கலவையான விமர்சனத்தையே பெற்று இருந்தது.

mike-tyson
Mike Tyson

மேலும் கடந்த மாதம் 28ஆம் தேதி சரவணன் அருள் நடித்த ‘தி லெஜெண்ட்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சரவணன் அருள், ஊர்வசி ரவுதெலா, பிரபு மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் நடித்து இருந்தார். இப்படமுமே கலவையான விமர்சனத்தையே பெற்றது.

the-legend
The Legend

இதில் சுவாரசியம் என்னவென்றால் படத்திற்கு ரேட்டிங் கொடுக்கும் பிரபல இணையதளமான IMDp இந்த இரண்டு படத்திற்கும் ரேட்டிங் கொடுத்து உள்ளது. தி லெஜெண்ட் படத்திற்கு 5.3 மற்றும் லைகர் படத்திற்கு 1.6 ரேட்டிங்கே கொடுத்து உள்ளது. இதன் மூலம் இது தோல்வி படமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தி லெஜெண்ட் திரைப்படம் ரேட்டிங்கில் லைகர் படத்தை வென்றுள்ளது.

Spread the Info

Leave a Comment