மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாச்சி சரவணன் அருள் நடிக்கும் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரைப்படம் இன்று வெளியானது. மொத்தம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் இன்று வெளியானது. திரையுலகில் முதல் முறையாக நடிக்க இருக்கும் இவர் படத்தை பார்க்க ஏராளமான ரகிகர்கள் திரையரங்குகளின் முன்னாலே குவிந்தனர். இயக்குனர் ஜே-டி ஜெர்ரி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தில் பிரபு, யோகி பாபு, நாசர், விஜயகுமார் மற்றும் மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் விவேக் என ஒரு சினிமா பட்டாளமே நடித்து உள்ளனர். ஆக்ஸன், ரொமேன்ஸ், காமெடி மற்றும் செண்டிமெண்ட் என பக்கா கமார்சியல் படமாக உருவாகி உள்ள இப்படமானது அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சாதாரணமாக இருக்கும் ஒரு மனிதன் எப்படி கஷ்டப்பட்டு லெஜென்டாக மாறுகிறான் என்பதை போல் இந்த கதை அமைந்து உள்ளது. அதாவது வெளிநாட்டில் வசித்துள்ள சரவணன் தனது சொந்த கிராமத்திக்கு வருகிறார்.

அங்கு தனது நண்பனின் குடும்பம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பிறகு சரவணனின் நண்பர் இறந்து போகிறார் அதனால் மனமுடைந்த அவர் சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். பிறகு சந்திக்கும் பிரச்சனை மருந்து கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் மீதி கதை. அவர் ரசிகர்களிடம் கேட்கும் போது இப்படம் அவரின் முதல் படம் போல் தெரியவில்லை நடிப்பில் அசதி இருக்கிறார் என கூறியுள்ளனர். பக்கா கமார்சியல் படமாக உருவாகி இருக்கும் இப்படமானது பேமிலி ஆடியன்ஸ்களுக்கு இடையே வரவேற்பு பெற்றுள்ளது. நீங்கள் இப்படத்தை பார்த்துவிடீர்களா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.