தி லெஜெண்ட் – போ போ போ பாடல் இன்று வெளியாகிறது!

சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான சரவணா அருள் நடிக்கும் படம் ‘தி லெஜெண்ட்’. கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் இவர் நடிக்கும் படத்தை இயக்குனர் ஜேடி ஜெர்ரி மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் மே மாதம் ரிலீஸ் ஆனது. அதன் பிறகு மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடிவாசல் பாட்டும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாட்டான போ போ போ பாட்டு இன்று வெளியாக உள்ளது. ஆக்ஸன், காமெடி, ரொமான்ஸ் என கமார்சியல் படமாக உருவாகி உள்ளது. இப்படம் ஜூலை 28ஆம் நாள் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதன் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடை பெற்றது. இதில் நடிகை தம்மன்னா, ஹன்சிகா மோத்வானி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

the-legend

பிரபல மும்பை மாடல் அழகி ஊர்வசி ரவுத்தல இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளர். பிரபு, விஜயகுமார், நாசர், சுமன், யோகி பாபு என ஒரு சினிமா பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் விவேக் அவர்கள் நடித்த கடைசி திரைப்படம் இது என்பது குறிப்படத்தக்கது. இந்நிலையில் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று போ போ போ பாடல் வெளியாகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ட்ரைலர், வாடி வாசல் பாடல் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் இப்பாடலும் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

the-legend
Spread the Info

Leave a Comment