சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி சரவணா அருள் நடிக்கும் திரைப்படம் ‘தி லெஜெண்ட்’ வருகின்ற 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. முதல் முறையாக சினிமாவில் நடிக்க இருக்கும் இவர் படத்தை இயக்குனர் ஜே-டி ஜெர்ரி மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரபு, விஜயகுமார், யோகி பாபு, நாசர் மற்றும் மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் விவேக் என ஒரு சினிமா பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மே மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேப்பைப் பெற்றது. அதன் பிறகு மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடிவாசல் பாடலும் நல்ல ட்ரெண்ட் ஆனது. ஆக்ஸன், ரொமான்ஸ், காமெடி மற்றும் செண்டிமெண்ட் என சூப்பர் கமார்சியல் படமாக உருவாகி உள்ளது.
இதன் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமான முறையில் நடந்தது. இதில் பிரபல நடிகைகள் தம்மன்னா, ஹன்சிகா மோத்வானி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கான ப்ரோமோஷனில் அண்ணாச்சி சரவணா அருள் இறங்கி வேலை செய்து உள்ளார். பிரமாண்டமாக பல செலவுகள் செய்துள்ள இவர் படத்தை பிரபல நிறுவனமான ஏ.பி. இன்டர்நேஷனல் வெளியிட உள்ளது. மேலும் இப்படமானது வரும் ஜூலை 28ஆம் நாள் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அண்மையில் கலந்து கொண்ட மிகப் பிரமாண்டமான பத்திரிக்கையாளர் சந்திப்பு துபாயில் நடைப்பெற்றிருந்தது.
அந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை லெஜண்ட் அண்ணாச்சி சரவணன் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது ஜூலை 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது மேலும் ஏ.பி இன்டர்நேஷனல் முழுமையான வெளிநாட்டுத் திரையரங்குகளில் வெளியிட உள்ளது என தெரிவித்துள்ளார்.