நடிகர் தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘திருச்சிற்றம்பலம்’. தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்து உள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து உள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படமானது ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே மித்ரன் ஜவஹர் தனுஷை வைத்து யாரடி நீ மோஹினி, உத்தம புத்திரன், குட்டி முதலிய படங்களை இயக்கி உள்ளார். இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்து உள்ளதால் படம் நிச்சயம் வெற்றிப்பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் ப்ளாக் பஸ்டர் காம்போ என்று அழைக்கப்படும் தனுஷ் அனிருத் இப்படத்தில் இணைந்து உள்ளனர். ஏற்கனவே 3, மாரி, வேலையில்லா பட்டதாரி என இந்த கூட்டணியில் உருவான அனைத்து பாடல்களும் நல்ல ஹிட்டானது.

இந்நிலையில் இக்கூட்டணி 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. மொத்தமாக நான்கு பாட்டுகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தனுஷ் எழுதி பாடிய ‘தாய்கிழவி’ பாட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், பிரகாஷ் ராஜ், செல்வா ராகவன் அனிருத் ரவிச்சந்தர், நித்யாமேனன், ராஷி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்.
