கண்ணிமைக்கும் நேரத்தில் தரைமட்டமான ட்வின் டவர்!😱 – வைரல் வீடியோ!

இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டா மாவட்டத்தில் உள்ள இரட்டை மாடி கோபுரம் இன்று தரை மட்டமாக்கப்பட்டது. ‘சூப்பர்டெக்’ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பாக இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டன. மிக பிரமாண்டமாக இருக்கும் இந்த இரட்டை கோபுர கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது சுற்றுசூழல் வீதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டதாக புகார் கூறப்பட்டிருந்தது.

twin-tower-noida
Twin Tower Noida

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தீர்ப்பின் முடிவில் இக்கட்டிடமானது விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது மேலும் இதை தகர்க்கும் பணிகள் தனியார் நிருபவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் படி இன்று மத்திய 2.30 மணி போல இந்த இரட்டை கோபுரம் வெடிகுண்டு வைத்து தகர்த்தப்பட்டது. கட்டிடத்திற்கு அருகே உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டன.

twin-tower-noida
Twin Tower Noida

ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் இக்கட்டிடத்தை சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். பல ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த இரட்டை கோபுரம் 10 வினாடிகளில் தரை மட்டமாக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ👇

Twitter Embed Code Credits: Vishal Verma

Spread the Info

Leave a Comment