நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி.வாசு இயக்க உள்ளார். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது, மேலும் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வடிவேலுக்கு இந்த படம் கம் பேக்காக இருப்பதால் ரசிகர்களுக்கு இடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா மற்றும் பலர் நடித்த சந்திரமுகி படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றிப்பெற்றது.

அதைத் தொடர்ந்து இப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. இப்படதின் பூஜை கடந்த வாரம் நடைப்பெற்றது. இந்நிலையில் நேற்று ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவின் சேட்டை வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. இவ்வீடியோவை நடிகை ராதிகா தனது ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் வடிவேலு அவர் நடித்த சுறா படத்தில் உள்ள ஒரு காட்சியில் நாக்கு தொங்கி நெஞ்சு வெடிச்சு செத்துர போறயா என்று முக பாவனையில் வென்னிற ஆடை மூர்த்தியிடம் கூறுவார். அதே போன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த சேட்டையை செய்துள்ளார்.

இதைப் பார்த்து ராகவா லாரன்ஸ் மற்றும் அனைவரும் சிரித்துள்ளனர். வடிவேலின் இந்த சேட்டை விடியோவை நடிகை ராதிகா பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது வடிவேலு திரைப்படங்களில் தனது அசாதாரண நடிப்பைக் கொண்டு எங்களில் பலரை மகிழ்வித்துள்ளார். இந்த பிரபலமான திரைப்படக் காட்சி எது என்று யூகிக்கவும்? எனக் கூறியுள்ளார். இந்த விடியோவது வைரலாகி நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த சேட்டை வீடியோ 👇