விஜய் தற்போது தனது 66ம் படமான ‘வாரிசு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது பிறந்தநாளன்று இப்படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். ரஷ்மிக்கா மந்தனா, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, சரத் குமார், ஷாம், பிரபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் வாரிசு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதற்கு முன் எஸ்.ஜே. சூர்யா நடிகர் விஜயை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கியுள்ளார். 2000ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் வெற்றி பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து ‘நண்பன்’ மற்றும் ‘மெர்சல்’ படங்களில் இணைந்து நடித்தார். தற்போது விஜயின் வாரிசு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் அவர்கள் அப்பிளிகேஷன் டிசைனராக பணியாற்றி வருகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா வில்லியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்று வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று லீக் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் விஜய் மாடியில் இருந்து மாஸாக நடந்து வருவது போல் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. மிகுந்த எதிப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்கள் அடிக்கடி வருவதால் சினிமா ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
