ஆசியாவில் சிறந்த படம் மாமனிதன் – மகிழ்ச்சியில் படக்குழு!😊

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து இயக்குனர் சீனுசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமனிதன்’ . இப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் முதல் முறையாக இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இப்படத்திற்கு இணைந்து இசையமைத்து இருந்தனர். இப்படம் நல்ல விமர்சனம் பெற்று அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.

maamanithan
Maamanithan

பிரபலங்கள் பலர் தங்கள் பாராட்டை தெரிவித்து இருந்தனர். தற்போது டோக்கியோவில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. ஆசியாவில் எடுக்கப்பட்ட சிறந்த திரைப் படங்களுக்கும் விருது கொடுக்கப்படும். இவ்விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து உள்ளார்.

Spread the Info

Leave a Comment