விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சம் இருக்காது. ‘பிக் பாஸ்’, ‘குக் வித் கோமாளி’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கலக்க போவது யாரு?’, ‘சூப்பர் சிங்கர்’ என அனைத்து நிகழ்ச்சிகளும் புகழ் பெற்றவை.

மேலும் இதில் பங்குபெறும் போட்டியாளர்களும் நல்ல பிரபலமாகி சின்னத்திரை, வெள்ளித்திரை என அடுத்தடுத்து சென்று கொண்டுதான் இருக்கின்றனர். சிவா கார்த்திகேயன் தொடங்கி கவின், முகின், ஷிவாங்கி, புகழ் என அனைவரும் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் புகழ். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இவர் பங்கேற்ற முதல் சீசன் எபிசோடுகள் மிகவும் பிரபலமானவை.

அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானார். மேலும் ‘வலிமை’, ‘சபாபதி’, ‘யானை’ ஆகிய படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சில தினங்களுக்கு முன்னர் தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். மேலும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தனது பத்திரிகையை பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் இவரது திருமணம் முடிந்து புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.