நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரன், பிரகாஷ் ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து வெளிவர இருக்கும் படம் விருமன். முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். இப்படத்தின் இயக்குனரான முத்தையா ஏற்கனவே நடிகர் கார்த்தியை வைத்து ‘கொம்பன்’ படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து உள்ள இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணாலே’ பாட்டு வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

நேற்று இப்படத்தின் ‘மதுர வீரன்’ பாடலின் கிலிம்ஸ் விடியோவை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது யூட்டியுப் பக்கத்தில் வெளியிட்டார். கிராமத்து கதையை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறது. ஏற்கனவே ‘பருத்தி வீரன்’ , ‘கொம்பன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததால் இப்படமும் மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படமானது ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்து வருகிறது. இதில் நடிகர் கார்த்தி, சூர்யா , அதிதி ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்துவெளியாக உள்ளது. வேஷ்டி சட்டையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி எடுத்து கொண்ட புகைப்படமும் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
