இந்தியா மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது T-20 நேற்று சென்ட் கீட்ஸில் உள்ள வார்னர் பார்க்கில் நடைப்பெற்றது. முதல் போட்டியில் அபார வெற்றிபெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றிப்பெறும் முனைப்பில் காலம் இறங்கியது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.

கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டத்தின் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். பின்னர் அடுத்ததடுத்து விக்கெட்களை பறி கொடுத்தது இந்தியா அணி. 20 ஓவ்ர்கள் முடிவில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா அணி. அதிகபட்சமாக இந்தியா அணியின் சார்பாக ஹர்திக் பாண்டியா 31 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 27 ரன்களும் எடுத்தனர். அபாரமாக பந்து வீசிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஒபேடு மெக்கோய் வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை சாய்த்தார். பின்பு குறைவான ரன்களை இலக்கமாக கொண்டு களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி.

இலக்கம் குறைவாக இருந்தாலும் கொஞ்சம் டஃப் கொடுத்தது இந்தியா அணி. ஒரு வழியாக கடைசி ஒவேரில் வெற்றி இலக்கை எட்டி இரண்டாவது T-20யில் வெற்றி பெற்றது மேற்கு இந்திய தீவுகள் அணி. அதிகபட்சமாக ப்ரோடான் கிங் 68 ரன்கள் மற்றும் டேவன் தாமஸ் 31 ரன்கள் விளாசினர். சிறப்பாக விளையாடி பந்து வீசிய ஒபேடு மெக்கோய் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இந்த வெற்றியின் மூலம் 1-1 என சமன் சித்து உள்ளது மேற்கு இந்திய அணி. 3வது T-20 போட்டி இன்று அதே மைதானத்தில் நடைபெற உள்ளது.