உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள ஒரிகான் நகரில் நடைப்பெற்று வருகிறது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 24ஆம் தேதி முடிய உள்ளது. 22 பேர் கொண்ட இந்தியா அணி இத்தொடரில் பங்கேற்றது. இப்போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவும் பங்கேற்றார். ஒலிம்பிக்கிற்கு பிறகு காயம் காரணமாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். தற்போது நடைப்பெற்று கொண்டிருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இன்று காலை நடைப்பெற்ற ஈட்டி எரிதல் தகுதி சுற்று போட்டியின் முதல் வாய்ப்பிலே 88.39 மீட்டர் எரிந்து தனது முதல் வாய்ப்பிலே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். மேலும் சக அணி வீரரான ரோஹித் யாதவ் 80.42 மீட்டர் எரித்து அவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 24 வயது ஆகும் நீரவ் சோப்ரா ஈட்டி எரித்தலில் கலக்கி வருகிறார். மேலும் இத்தொடரின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைப்பெற உள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா ஈட்டி எரித்தலில் கதாநாயகனாக உள்ளார். பல்வேறு சாதனைகளை படைத்தது உள்ள இவர் இத்தொடரில் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர் பார்க்கப் படுகிறது.
