சியோமி நிறுவனம் மனிதனை போல் உள்ள ஒரு ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோவானது சியோமி வெளியிடும் இரண்டாவது ரோபோவாகும். இதில டெஸ்லா போட்(Tesla போட்) program செய்யப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன் Xiaomi CyberDog என்ற ரோபோவை அறிமுக படுத்தியது. இப்பொது வெளியிட்டுள்ள இந்த ரோபோவின் பெயர் Xiaomi CyberOne ஆகும். மற்ற நிறுவனங்களின் மனித ரோபோவை போலவே இந்த ரோபோவும் சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.

அதிக அளவு நுண்ணறிவை கொண்டுள்ள இந்த ரோபோ எதிர்காலத்தில் மனிதனின் உணர்ச்சிகளை உணரும் திறனும் இருக்கும். தற்போது நடப்பதில் சிக்கலாக உள்ள இந்த ரோபாட்டை மேலும் அதன் திறனை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த cyberone ரோபோவானது தற்போதுள்ள மனித உருவ ரோபோக்களில் பெரியதாக கருதப்படுகிறது. இதன் உயரம் 177 சென்டிமீட்டர் (5 அடி 9 அங்குலம்) மற்றும் 52கிலோ(115 பவுண்டுகள்) எடையும் உள்ளது. நிகழ் கால செய்திகளை சொல்வது மற்றும் 1.5கிலோ எடை கொண்ட பொருளை எடுத்து செல்வது இதன் திறனாகும்.

இதில் program செய்யப்பட்ட algarithms முப்பரிமாணத்தில்(3d) இருக்கும் இடத்தை உணரக்கூடியது. மேலும் மனிதர்களின் முக பாவனைகளை கொண்டு அவர்களை அடையாளம் காணும் திறன் உடையது. Xiaomi CyberOneனின் முதல் தலைமுறை ரோபோவானது மனித ரோபோக்களை உருவாவதற்கான முதல் படியாகும் என கூறுகிறது.

மேலும் இது உருவாக்குவதற்கான நிறுவனத்தின் முதல் படியாகும் என்பதை Xiaomi தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த ரோபோ இயல்பு வாழ்க்கையில் பயன்படுத்த சில நேர காலம் ஆகும் என கூறியுள்ளது.
YouTube Embed Code Credits : Xiaomi