வந்துடேன்னு சொல்லு, திரும்ப வந்துடேன்னு சொல்லு. 25 வருஷத்துக்கு முன்னாடி RX-100 எப்படி இருந்தானோ அப்டியே திரும்ப வந்துடேன்னு சொல்லு. ஜப்பானைச் சேர்ந்த மிக பிரபலமான ஆட்டோ மொபைல் நிறுவனம் யமஹா ஆகும். பைக் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பிராண்ட் யமஹா என்பதை யாராலும் மறுக்க முடியாது. FZ ரக மாடல் பைக்ஸ், R 15 ரக மாடல் பைக்குகளுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். மேலும் build quality மற்றும் பிரேக்கிங் சிஸ்டமிலும் யமஹா பைக்கை அடிச்சிக்க ஆளே இல்லை. யமஹா பைக்கின் இந்த வெற்றிக்கு RX-100 பைக்கும் ஒரு முக்கியமான காரணம் என்பது யாராலும் மறுக்க முடியாது. இந்த பைக்கின் உற்பத்தி ஆனது 1985ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த பைக்கின் என்ஜின் சிஸ்ட்டமானது 2-strokeகை கொண்டது.

இந்த பைக் பெயர் தெரியாத 80’ஸ் மற்றும் 90’ஸ் இல்லை என கூறலாம். மிகவும் பிரபலமான வண்டியான RX-100 அதன் சத்தத்திற்கு பெயர் போனது. அதாவது அதன் throttle சத்தத்தை வைத்தே எங்கு இருந்தாலும் இந்த வண்டி என கண்டு பிடித்திடலாம். இதன் two-stroke என்ஜின் அதிகளவு மாசு ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த வண்டியின் உற்பத்தியை 1996ஆம் ஆண்டு நிறுத்தியது. உற்பத்தியை நிறுத்தி 26 ஆண்டுகள் ஆனாலும் இதன் மவுசு இன்னும் குறையவில்லை. இன்னும் 1.5 லச்சத்தில் இருந்து 2 லச்சம் வரையும் வாங்குவதர்க்காக இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இதன் விலை 1986ல் தோராயமாக 40000 இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் செய்தி ஒன்றுக்கு பேட்டி அளித்த இந்தியா யமஹா மோட்டார் தலைவர் ஈஷின் சிஹான RX-100 பைக்கை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் இது பழைய மாடலைப் போல் 2-strokeக்கில் வராது அதற்கு மாறாக டிசைன் மாற்றி அமைக்கப்படும் என கூறியுள்ளார். இந்த செய்தியானது பைக் பிரியர்களுக்கு இடையே வரவேற்பை பெற்றுள்ளது.