சூப்பர்ஸ்டாருக்கு பேரனாக நடிக்கும் லேடி சூப்பர்ஸ்டார் கூட நடித்த குட்டி பயன்!😍

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இப்படத்தின் புது போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியதாக தகவல்கள் வெளியானது.

rajinikanth
Rajinikanth – Jailer

மேலும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படத்தை அண்ணாத்தே படத்தை தயாரித்த சன் பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டது.

jailer
Jailer

தற்போது ரஜினிகாந்த் அவர்களின் பேரனாக பிரபல யூட்யூப் பிரபலமான ரித்விக் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரது யூட்யூப் விடீயோக்கள் மிகவும் பிரபலமானது. பல்வேறு கதாபாத்திரங்களை நகைச்சுவையாக சித்தரிக்கும் இவரது நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

nayanthara-rithvik
Nayanthara Rithvik

இவர் நயன்தாராவின் ‘O2’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக ஆனார். தற்போது ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Spread the Info

Leave a Comment