கூகிள் மீட்டில் இனி யூட்டுயூப் லைவ் ஸ்ட்ரீம் செய்யலாம் – அசத்தல் அம்சம்!😲

கூகிள் மீட் இப்போது யூட்டுயூப்பில் லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்கான திறனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அம்சமானது கூகிள் மீட் மூலம் முன்னாள் இருந்த லைவ் ஸ்ட்ரீமிங் நிகழ்வுகளின் பழைய முறையை விட எளிதாகத் திறக்க முடியும். YouTube இல் Google Meetஐ லைவ்ஸ்ட்ரீம் செய்ய விரும்பினால், உங்கள் YouTube சேனலை அங்கீகரிக்க முன்னரே கோரிக்கை வைக்க வேண்டும். இதை ஒப்புதல்(approval) செய்ய 24 மணிநேரம் வரை ஆகலாம். லைவ் ஸ்ட்ரீம்கள் எவ்வளவு நீளமாக இருக்க வேண்டும், எவ்வளவு நேரம் வரை செய்யலாம் என்பதைத் தங்கள் அமைப்புகளில் பயனர்கள் மாற்றி வைத்து கொள்ளலாம்.

google-meet

கூகுள் மீட் இந்த ஆண்டில் பல மாற்றங்களைச் செய்துள்ளது வாய்ஸ் கால்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ் அழைப்புகளுக்கான ஒரே மையமாக கூகுள் டியோ(dio)வுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக்அவுட் ரூம்களுக்கான(rooms) மேம்பாடுகள் மற்றும் அனைவரின் வீடியோக்களையும் ஒரே நேரத்தில் அணைக்க(off) அல்லது அனைவரையும் முடக்க மற்றும் “video lock” அம்சங்களும் வர உள்ளது. இந்த சேவை மிக விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. மேலும் இந்த அம்சமானது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the Info

Leave a Comment