ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிக புல்-அப்கள் எடுத்து நெதர்லாந்துதைச் சேர்ந்த பிட்னெஸ் யூடியூபர்கள் கின்னஸ் சாதனையை நிகழ்த்தி உள்ளனர். GWR வெளியிட்டுள்ள செய்தியின்படி , நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி மற்றும் அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகிய இருவர் இந்த சாதனையை செய்துள்ளனர். தகவலின் படி அவர்கள் இந்த புஷ்-அப் சவாலை அதிகார நீதிபதி முன்னர் முயற்சி செய்துள்ளனர்.

அர்ஜென் முதலில் சென்று ஹெலிகாப்டரில் ஒரு நிமிடத்தில் 24 புல்-அப்களை செய்தார். ஆர்மேனியாவின் ரோமன் சஹ்ரத்யனின் முந்தைய 23 சாதனையை அவர் முறியடித்தார். அதன் பிறகு ஸ்டான் பிரௌனி ஹெலிகாப்டரில் ஏறி ஒரு நிமிடத்தில் 25 புல்-அப்களை எடுத்தார். இதனால் இருவரும் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

GWR கூறிய படி ,இந்த உலக சாதனையை செய்வதற்காக இரண்டு விளையாட்டு வீரர்களும் ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க 15 நாட்கள் எடுத்தனர். ஹெலிகாப்டரின் அசைவுகளுக்கு ஏற்றார் போல pvc குழாய்களை பயன்படுத்தி உள்ளனர். மேலும் இந்த pvc பைப்புகளானது சாதாரண பைப்புகளை விட தடிமன்னாக இருக்கும் என கூறியுள்ளார்.