இந்த அப்டேட் போதுமா! – ‘விருமன்’ படத்தின் அடுத்த அப்டேட்!😄

நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து வெளிவர இருக்கும் படம் விருமன். முத்தையா இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இயக்குனர் முத்தையா ஏற்கனவே கார்த்தியை வைத்து ‘கொம்பன்’ படத்தை இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து உள்ளனர்.

viruman
Viruman

இப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணாலே’ பாட்டு ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது. மேலும் அதைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. அடுத்தடுத்த அப்டேட்கள் வருவதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்பைத் தூண்டி உள்ளது.

viruman
Viruman

தற்போது இப்படத்தின் ‘மதுர வீரன்’ பாடலின் கிலிம்ஸ் விடியோவை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது யூட்டியுப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இப்படமானது ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இப்படமானது கிராமத்து கதையை மையமாக கொண்டு எடுக்கப்படுவதால் ‘பருத்தி வீரன்’ படம் போன்று வெற்றி அடையும் என்று ரசிகர்களால் எதிர் பார்க்கப்படுகிறது.

viruman-poster
Spread the Info

Leave a Comment