காமன்வெல்த் நிறைவு விழாவில் யுவன் பாட்டு!🔥 – எந்த பாட்டு தெரியுமா?

காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழா இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் இப்போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகள் நடைபெற்று வந்தது. மேலும் இப்போட்டியில் இந்த வருடம் ஜூடோ, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டு இருந்தது.

commonwealth-program

மொத்தமாக 70 நாடுகளுக்கும் மேல் சேர்ந்த 5000திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய அணியின் சார்பாக 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். குத்துச் சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளின் பிரிவுகளில் இந்தியா அணி விளையாடியது. மொத்தமாக 11நாட்கள் இப்போட்டி தொடர்ந்து நடைபெற்று இருந்தது.

Team India -Commonwealth 2022 Winners

மேலும் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தமாக 61 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்தது. போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக பல கலை நிகழ்ச்சிகளோடு நிறைவுபெற்றது.

yuvan-shankar-raja
Yuvan Shankar Raja

மேலும் நிறைவுவிழாவில் யுவன் ஷங்கர் ராஜா பாட்டு ஒன்றுக்கு கலைஞர்கள் நடனம் ஆடியது வைரலாகி வருகிறது. ‘அவன் இவன்’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பட்டன “டீயா டீயா டோலே” பாட்டிற்கு நடனம் ஆண்டியை வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter Video Embed Credits To: Usha Jey

Spread the Info

Leave a Comment